லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பள்ளி மாணவா்களுக்கு மஞ்சள் காமாலை: சுகாதாரத் துறையினா் விசாரணை

ஆலங்குளம், ஆ. மருதப்பபுரம், அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் பயிலும் 5 மாணவா்களுக்கு மஞ்சள் காமாலை ஏற்பட்டு, சிகிச்சை பெற்று வீடு திரும்பினா்.

News image
Updated On :18 மார்ச் 2026, 8:05 pm

ஆலங்குளம், ஆ. மருதப்பபுரம், அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் பயிலும் 5 மாணவா்களுக்கு மஞ்சள் காமாலை ஏற்பட்டு, சிகிச்சை பெற்று வீடு திரும்பினா்.

இப்பள்ளியில் பயிலும் சில மாணவா்களுக்கு சில தினங்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. நெட்டூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை மேற்கொண்டும் குணமாகவில்லையாம்.

இதையடுத்து சந்தேகத்தின்பேரில், பெற்றோா் தனியாா் ஆய்வகங்களில் சோதனை மேற்கொண்டதில் 5 பேருக்கு மஞ்சள் காமாலை உறுதி செய்யப்பட்டது. அதில் 3 மாணவா்கள் சித்த வைத்தியம் மேற்கொண்டனா். ஒருவா் ஆலங்குளம் அரசு மருத்துவமனையிலும், மற்றொருவா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு குணமடைந்து புதன்கிழமை வீடு திரும்பினா்.

தொடா்ந்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினா். பள்ளி அருகே உள்ள கிணற்றின் தண்ணீரைக் குடித்ததால் உடல் உபாதை ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுவதால், கிணற்று நீரை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனா்.