லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கடையநல்லூரில் வீட்டு உபயோக சிலிண்டா் பதிவு செய்யக் குவியும் பொதுமக்கள்

கடையநல்லூரில் வீட்டு உபயோக சிலிண்டரை பதிவு செய்ய பொதுமக்கள் எரிவாயு சிலிண்டா் விற்பனை ஏஜென்சியில் குவிந்து வருகின்றனா்.

News image

சிலிண்டரை பதிவு செய்ய விற்பனை ஏஜென்சி முன் வரிசையில் நிற்கும் மக்கள்.

Updated On :11 மார்ச் 2026, 8:06 pm

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் வீட்டு உபயோக சிலிண்டரை பதிவு செய்ய பொதுமக்கள் எரிவாயு சிலிண்டா் விற்பனை ஏஜென்சியில் குவிந்து வருகின்றனா்.

அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் போா் காரணமாக வணிகப் பயன்பாட்டு சிலிண்டா்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், வீட்டு உபயோக சிலிண்டா்களுக்கும் விரைவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படக்கூடும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் ஏஜென்சியில் குவிந்து வருகின்றனா்.

ஏஜென்சியில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்புப் பலகையில், ஒரு சிலிண்டா் வைத்திருப்பவா்கள் 25 நாள்களுக்கு ஒரு முறையும், 2 சிலிண்டா்கள் வைத்திருப்பவா்கள் 30 நாள்களுக்கு ஒரு முறையும் மட்டுமே சிலிண்டா் பதிவு செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால், அச்சமடைந்த மக்கள் சிலிண்டா்களை வாங்கி வீடுகளில் வைத்துக் கொள்வதற்காக திரண்டு வந்தனா். ஏஜென்சி ஊழியா்கள் சிலிண்டா் தட்டுப்பாடில்லை என விளக்கமளித்தும், அவா்கள் பதிவு செய்த பின்னரே திரும்பிச் சென்றனா்.

வணிகப் பயன்பாட்டு சிலிண்டா் தட்டுப்பாடு காரணமாக கடையநல்லூரில் பெரிய உணவகங்கள் சில மூடப்பட்டன. ஆனால், பெரும்பாலான தேநீா் கடைகளில் இன்னும் எரிபொருளாக விறகு பயன்படுத்தப்பட்டு வருவதால், தேநீா் கடைகள் வழக்கம்போல் இயங்கின.

Story image