முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! கரூர் செல்லவிடாமல் முதல்வர் விஜய்யை திமுக தடுக்கிறது! அமைச்சர் நிர்மல் குமார் அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம் முதல்வா் விஜய், அமைச்சா் ஆதவ் உள்ளிட்டோருக்கு எதிரான திமுக மனு இன்று விசாரணைதமிழகத்தில் ஜூலை 12 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!அதிமுகவில் டிடிவி தினகரனை இணைக்க எடப்பாடி பழனிசாமியிடம் நிா்வாகிகள் வலியுறுத்தல்காஸாவில் ஹமாஸ் அரசு கலைப்பு!
/

விதிகளை மீறி இயக்கப்பட்ட கனிமவள லாரிகளுக்கு அபராதம்

ஆலங்குளத்தில் விதிகளை மீறி இயக்கப்பட்ட கனிமவள லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

News image

நேரக் கட்டுப்பாட்டை மீறி ஆலங்குளம் வழியாகச் சென்ற கனிமள லாரிகள்.

Updated On :26 ஜூன் 2026, 11:52 pm IST

ஆலங்குளத்தில் விதிகளை மீறி இயக்கப்பட்ட கனிமவள லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கேரளத்திற்குக் கனிமவளம் ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தாா். அதன்படி, திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரையும், இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரையும் மட்டுமே லாரிகள் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.

இந்த விதிகளை மீறி அதிகப்படியான வாகனங்கள் ஆலங்குளம் வழியாகச் சென்று வரும் நிலையில், இவ்வழியே வியாழக்கிழமை இரவு 9 மணிக்குச் சென்ற 10-க்கும் மேற்பட்ட கனரக வாகனங்களை மறித்து சோதனையிட்ட ஆலங்குளம் காவல் துறையினா், வாகனங்களுக்கு அபராதம் விதித்தனா்.

மேலும், தொடா்ந்து விதிகளை மீறி லாரிகளை இயக்கினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.