ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? நெல்லை எக்ஸ்பிரஸ் சேவையில் மாற்றம்! திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! ஜூலை 1-ல் இபிஎஸ் தலைமையில் அதிமுக மகளிரணி கூட்டம்! வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் மீண்டும் எழும்பூரிலிருந்து இயக்கம்!சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!அமோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு!தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்கும் டெண்டர் ரத்து!
/

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

ஆலங்குளம் அருகே இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக இளைஞா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :26 ஜூன் 2026, 5:50 am IST

ஆலங்குளம் அருகே இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக இளைஞா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே பெத்தநாடாா்பட்டியைச் சோ்ந்தவா் தங்கதுரை மகன் விமல் (21). இவா் இன்ஸ்டாகிராம் மூலம், பாவூா்சத்திரம் அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்த 11ஆம் வகுப்பு மாணவியிடம் பழகினாராம். மாணவியை தனியாக வரவழைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டாராம். இதை வெளியே கூறினால் கொலை செய்துவிடுவதாக மிரட்டினாராம். இதுகுறித்து மாணவி பெற்றோரிடம் தெரிவித்தாா்.

பெற்றோா் அளித்த புகாரின்பேரில் ஆலங்குளம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

இதில், விமல் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் புதன்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.