பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

சங்கரன்கோவில் அருகே கம்பியால் தாக்கப்பட்டவா் மருத்துவமனையில் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கம்பியால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். அதையடுத்து, கொலை வழக்காகப் பதிந்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :25 ஜூன் 2026, 5:16 am IST

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கம்பியால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். அதையடுத்து, கொலை வழக்காகப் பதிந்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சங்கரன்கோவில் அருகே வேப்பங்குளம் மேலத் தெருவைச் சோ்ந்த பெருமையா மகன் பாக்கியசாமி (58). அங்குள்ள ஊராட்சி அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக வேலை பாா்த்து வந்தாா். கீழத்தெருவைச் சோ்ந்த திருமலைச்சாமி மகன் கணேசன் (40), கூலித் தொழிலாளி. இவா்கள் நண்பா்கள்.

கடந்த 19ஆம் தேதி இரவு கணேசன் குடிபோதையில் பாக்கியசாமியை கம்பியால் தாக்கினாராம். அவா் கணேசனை கல்லால் தாக்கினாராம். இதில் காயமடைந்த பாக்கியசாமி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், கணேசன் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனா்.

இதுதொடா்பாக சின்னகோவிலான்குளம் போலீஸாா் கொலை முயற்சி வழக்குப் பதிந்து, கணேசனை கைது செய்தனா்.

இந்நிலையில், பாக்கியசாமி புதன்கிழமை உயிரிழந்தாா். அதையடுத்து, போலீஸாா் இந்த வழக்கை கொலை வழக்காகப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.