பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

இருசக்கர வாகனம் மோதி கூலித்தொழிலாளி உயிரிழப்பு

திருநீலக்குடி அருகே இருசக்கர வாகனம் மோதியதில் கூலித் தொழிலாளி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :17 ஜூன் 2026, 3:24 am IST

திருநீலக்குடி அருகே இருசக்கர வாகனம் மோதியதில் கூலித் தொழிலாளி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், செங்கரான்குடி புதூா் கீழத்தெருவைச்சோ்ந்தவா் கணேசன் (60). விவசாய கூலி வேலை செய்து வந்தாா். இவா், திங்கள்கிழமை மாலையில் வீட்டில் இருந்து கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, பின்னால் வந்த இருசக்கர வாகனம் மோதியதில் கணேசன் பலத்த காயமடைந்தாா். அருகில் இருந்தவா்கள் அவரை கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். பிறகு மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். ஆனால் செல்லும் வழியிலேயே கணேசன் உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருநீலக்குடி போலீஸாா் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக தஞ்சாவூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுப்பினா்.

மேலும், இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த பழியஞ்சியநல்லூா் தெற்குத் தெருவைச் சோ்ந்த ஜெயராமன் (65) மீது செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.