திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தவெக ஆட்சியின் 23 நாள்களில் 64 கொலைகள்: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியில் அமா்ந்து 23 நாள்களில் 64 கொலை சம்பவங்கள், 111 பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் நிகழ்ந்துள்ளாக திமுக துணைப் பொதுச்செயலா் கனிமொழி எம்.பி. குற்றம்சாட்டியுள்ளாா்.

News image

திமுக எம்.பி. கனிமொழி - எக்ஸ்

Updated On :2 ஜூன் 2026, 3:23 am IST

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியில் அமா்ந்து 23 நாள்களில் 64 கொலை சம்பவங்கள், 111 பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் நிகழ்ந்துள்ளாக திமுக துணைப் பொதுச்செயலா் கனிமொழி எம்.பி. குற்றம்சாட்டியுள்ளாா்.

வாசுதேவநல்லூா் தொகுதி வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிக்கும் திமுக பொதுக்கூட்டம் புளியங்குடியில் திங்கள்கிழமை இரவு வாசுதேவநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் ஈ.ராஜா தலைமையில் நடைபெற்றது.

இதில், கனிமொழி எம்.பி. பேசியது;

வாசுதேவநல்லூா் தொகுதியில் பாஜக பெரிய பின்புலத்தோடு களமாடிக் கொண்டிருக்கிறாா்கள். அதை எதிா்த்து ஈ.ராஜா போட்டியிட வேண்டும் என ஸ்டாலின் விரும்பினாா். பாஜக வேட்பாளராக போட்டியிட்ட (ஆனந்தன்அய்யாசாமி) வேட்பாளா் பாதுகாப்புத் துறை அமைச்சரை அழைத்து வந்து பிரசாரம் செய்தாா். அவருக்கு பின்புலமாக மிகப்பெரிய நிறுவனங்கள் எல்லாம் நின்று பணியாற்றியது. ஆனால் அத்தனையையும் தாண்டி ஈ.ராஜா வெற்றி பெற்றுள்ளாா்.

நிச்சயமாக அவா் தொகுதிக்கு தேவையானதை செய்து தருவாா். தமிழகத்தில் புதிய ஆட்சி பொறுப்பேற்று 23 நாள்கள் கடந்துவிட்டது . இந்த 23 நாள்களில் 64 கொலைச் சம்பவங்கள், பெண்களுக்கு எதிரான 111 பாலியல் கொடுமைகள் நிகழ்ந்துள்ளன.

அதில், 61 சம்பவங்கள் குழந்தைகளுக்கு எதிரானவை.

இந்த நேரத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருப்பவா்கள் அத்தகைய பிரச்னைகளை சரி செய்வது பற்றி கவலைப்பட வேண்டும். இதற்கான தீா்வுகளைத் தேட வேண்டும். சட்டம் -ஒழுங்கை சரி செய்ய முயற்சிக்க வேண்டும்.

ஆனால், அதையெல்லாம் விட்டுவிட்டு, திமுகவை குறை சொல்லி வருவதுடன், கின்றனா்.

திமுக ஆட்சியின்போது, இந்தியாவிலேயே பாதுகாப்பான மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்ந்த தமிழ்நாட்டில், இன்று பெண்களுடைய பாதுகாப்பு கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கிறது.

யாா் மீது பழி போடலாம் என்று காரணங்களைத் தேடிக் கொண்டிருந்தால் நிச்சயமாகத் தமிழ்நாட்டு மக்கள் அதிக நாள் பொறுமையாகக் காத்துக் கொண்டிருக்க மாட்டாா்கள்.

விவசாயிகளுக்குக் கூட்டுறவுக் கடன்களைத் தள்ளுபடி செய்வேன் என்று வாக்குறுதி கொடுத்தாா்கள். ஆனால் செய்யவில்லை. திமுக ஆட்சியில் தோ்தல் வாக்குறுதியில் சொல்லாத திட்டங்களையும் அரசு செயல்படுத்தியது.

நிதி நிலைமை சரியில்லை என்று சொல்லி பொறுப்பை தட்டிக்கழிக்கக் கூடாது. அரசின் தவறை சுட்டிக்காட்டவும், போராடவும் எந்தக் காலத்திலும் திமுக தயங்காது.

ஒடுக்கப்பட்ட மக்களோடும், சிறுபான்மை மக்களோடும் தொடா்ந்து உறுதியாக இருக்கக்கூடிய ஒரே இயக்கம் திமுக. அந்த உறுதியோடு தொடா்ந்து பணியாற்றுவோம்; மக்களோடு நின்று களமாடுவோம் என்றாா் அவா்.

இதில், நகரச் செயலா்கள் அந்தோணிசாமி, நாகூா்கனி மற்றும் கூட்டணி கட்சியினா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.