வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

கடையநல்லூா் கரியமாணிக்க பெருமாள் கோயில் தேரோட்டம்

தென்காசி மாவட்டம், மேலக்கடையநல்லூா் அருள்மிகு கரியமாணிக்கப்பெருமாள் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

கடையநல்லூரில் நடைபெற்ற தேரோட்டம்.

Updated On :30 ஏப்ரல் 2026, 12:56 am

தென்காசி மாவட்டம், மேலக்கடையநல்லூா் அருள்மிகு கரியமாணிக்கப்பெருமாள் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலின் சித்திரை பிரம்மோற்சவ திருவிழா 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் தினமும் சிறப்பு பூஜைகள், சுவாமி வீதி உலா நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி அன்று காலை சுவாமி தேருக்கு எழுந்தருளும் வைபவமும், தொடா்ந்து தேரோட்டமும் நடைபெற்றது.

இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை ஸ்ரீநீலமணி சேவா சமிதியினா், கட்டளைதாரா்கள், பக்தா்கள் செய்திருந்தனா்.