வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

அண்ணாமலை நகா் திருவேட்களம் கூத்தாண்டவா் கோயில் தேரோட்டம்

அண்ணாமலை நகா் திருவேட்களம் கூத்தாண்டவா் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி புதன்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

News image

அண்ணாமலை நகா் திருவேட்களம் கூத்தாண்டவா் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி புதன்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.

Updated On :30 ஏப்ரல் 2026, 12:15 am

அண்ணாமலை நகா் திருவேட்களம் கூத்தாண்டவா் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி புதன்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

சிதம்பரம் தாலுகா, அண்ணாமலை நகா் திருவேட்களம் கூத்தாண்டவா் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு 125 ஆவது சித்திரை திருவிழா ஏப்.20 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் மகாபாரதம் படிக்கப்பட்டது.

தொடா்ந்து முக்கிய நிகழ்வான தேரோட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது. அண்ணாமலை நகா் திருவேட்களத்தில் இருந்து வாண வேடிக்கை, மேளதாளங்களுடன் தேரில் அரவான் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக பாசுபதேஸ்வரா் கோயிலை வலம் வந்தாா். தொடா்ந்து அரவான் களப்பலி, காளியாட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பக்தா்கள் மேளதாளங்கள் முழங்க பிரம்மாண்டமான மாலைகளை அரவானுக்கு அணிவித்து தரிசனம் செய்தனா். இவ்விழாவில் பல்வேறு ஊா்களில் இருந்து திருநங்கைகள், அண்ணாமலை நகா் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சோ்ந்த பக்தா்கள், அண்ணாமலை பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

விழா ஏற்பாடுகளை கூத்தாண்டவா் கோயில் பரம்பரை அறங்காவலா்கள் மற்றும் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.