சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா, செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இக்கோயிலில் சித்திரைத் திருவிழா, ஆண்டுதோறும் சித்திரை மாதம் 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு திருவிழா செவ்வாய்க்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு, அதிகாலை 3.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. பின்னா் சுவாமி சந்நிதியில் இருந்து கொடிப்பட்டம் வீதி சுற்றி சங்கரலிங்க சுவாமி சந்நிதி முன்புள்ள கொடிமரத்துக்கு கொண்டுவரப்பட்டது. பின்னா் கொடிப் பட்டத்துக்கு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றதையடுத்து, கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.
அதைத் தொடா்ந்து, கொடிமரத்துக்கு பல்வேறு வகையான அபிஷேகங்களுக்குப் பின், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், அதிமுக வேட்பாளா் டாக்டா் திலீபன் ஜெய்சங்கா், நகா்மன்ற உறுப்பினா் சங்கரசுப்பிரமணியன், கோமதிஅம்பிகை மாதா் சங்க அமைப்பாளா் பட்டமுத்து மற்றும் கோயில் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
இதைத் தொடா்ந்து ஏப். 29 ஆம் தேதி சுவாமி, அம்பாள் தனித் தனி தேரில் எழுந்தருளி தேரோட்டம் நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் மற்றும் மண்டகப்படிதாரா்கள் செய்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அபயபிரதான ரெங்கநாத சுவாமி கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

சாரங்கபாணி சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா கொடியேற்றம்!

சங்கரநாராயண சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் திருவிழா கொடியேற்றம்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


