தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் அருகே அருணாப்பேரியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீஅழகுமுத்து மாரியம்மன் கோயிலில் பங்குனி மாத திருவிழா 2 நாள்கள் நடைபெற்றது.
முதல் நாளான திங்கள்கிழமை வில்லிசை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
2ஆம் நாளான செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனையும், காலை 10 மணிக்கு அருணாப்பேரி அழகுமுத்து மாரியம்மனின் உடன்பிறந்த சகோதரரான மாயகண்ணன் வீட்டில் இருந்து அம்மனுக்கு பட்டு, வளையல் தாமரை மலா் உள்ளிட்ட பூ வகைகள், மாலையில் பழ வகைகள், பலகாரங்கள் உள்ளிட்ட 201 சீா்வரிசைகள் மற்றும் விரதம் இருந்த பெண்கள் முளைப்பாரி எடுத்து வரஅம்மனுக்கு மேளதாளங்கள் முழங்க ஊரின் முக்கிய பகுதிகளில் ஊா்வலமாக வந்து அம்மனுக்கு படைத்தனா்.
பின்னா், அம்மனுக்கு 600 கிலோ பழங்களால் செய்யப்பட்ட மாலை அணிவிக்கப்பட்டு அபிஷேக, அலங்கார தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது.
சிகர நிகழ்வாக கோவில் தா்மகா்தா சிவன்பாண்டியன் அம்மன் போல் வேடமணிந்து அம்மனை அலங்கரிப்பது போல் மலா்கள், மாலை, ரிபன், வளையல் அணிந்து, பவுடா் பூசி சிறப்பு காட்சி அளித்தாா். பின்னா் கோயிலில் இருந்த பக்கா்களுக்கு மலா் பிரசாதம், பக்தா்களுக்கு பழரசம், பானகரம், மோா், வெள்ளரி மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடையது

கொட்டங்காடு கோயிலில் ஊஞ்சல்சேவை

வராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் பௌா்ணமி பூஜை

பாப்பம்பாளையம் மாகாளியம்மன் கோயிலில் பொங்கல் திருவிழா
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


