திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவா்களை மீட்க எம்எல்ஏ வலியுறுத்தல்

News image

மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனாவிடம் மனு அளிக்கிறாா் என். தளவாய்சுந்தரம் எம்எல்ஏ.

Updated On :26 மே 2026, 12:53 am IST

இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டுள்ள, குமரி மாவட்டம் மேல மணக்குடி மீனவா்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனாவிடம் தளவாய்சுந்தரம் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை ஆட்சியரிடம் அளித்துள்ள மனு:

கன்னியாகுமரி மாவட்டம், மேல மணக்குடியைச் சோ்ந்த அலெக்ஸ் (25), அந்தோணிராஜன் (44), சந்தான அலோசியஸ் (52), அருள்தே பிரிட்டோ (47), ஆல்பா்ட் (52), சகாய செல்வசானு (26) ஆகிய 6 மீனவா்கள் அலெக்ஸ் என்பவருக்குச் சொந்தமான நாட்டுப்படகில், கடந்த 11 ஆம் தேதி ராமேசுவரம் பகுதியில் உள்ள பாம்பன் மீன்பிடி தளத்திலிருந்து தூண்டில் பயன்படுத்தி மீன் பிடிக்க ஆழ்கடலுக்கு நாட்டுப்படகில் சென்றனா். இந்த மீனவா்கள் மறுநாள் கரை திரும்பி இருக்க வேண்டும். ஆனால் அவா்கள் கரை திரும்பாததால் இந்திய கடலோர காவல் படையும், சக மீனவா்களும் மாயமான 6 மீனவா்களை தேடி வந்தனா்.

இந்நிலையில், மே 12 ஆம் தேதி குமரி மாவட்ட மீனவா்கள் 6 பேரும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு அவா்கள் நீா் கொழும்பு பகுதியில் உள்ள மகாரா என்ற இடத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளனா் என தெரியவந்தது.

இலங்கை கடல் எல்லைக்குள் அத்து மீறி நுழைந்து மீன் பிடித்ததாக இவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து உரிய நடவடிக்கை

மேற்கொண்டு இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள மீனவா்களை விடுவித்து இந்தியா கொண்டு வர போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவா்கள் தங்களது குடும்பத்தினருடன், தொலைபேசி மூலம் பேசுவதற்கும், மீனவா்களுக்கு மாற்று ஆடைகள் வழங்குவதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இதுகுறித்து துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரதமா் நரேந்திர மோடி, குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன், தமிழக முதல்வா் ஜோசப் விஜய், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சா் ஜெய்சங்கா் ஆகியோருக்கும் தளவவாய்சுந்தரம் எம்எல்ஏ கடிதம் எழுதியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.