தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பகவதியம்மன் கோயில் வைகாசி விசாகத் திருவிழா இன்று தொடக்கம்

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் வைகாசி விசாகப் பெருந்திருவிழா வியாழக்கிழமை (மே 21) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

News image

பகவதியம்மன் கோயில் வைகாசி விசாகத் திருவிழா இன்று தொடக்கம்

Updated On :21 மே 2026, 5:48 am IST

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் வைகாசி விசாகப் பெருந்திருவிழா வியாழக்கிழமை (மே 21) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாகப் பெருந்திருவிழா, நவராத்திரி திருவிழா 10 நாள்கள் நடைபெறும். நிகழாண்டு திருவிழா வியாழக்கிழமை தொடங்குகிறது. இதையொட்டி, அதிகாலை 5 மணிக்கு அபிஷேகம், 5.30 மணிக்கு கணபதி ஹோமம், 8 முதல் 9 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறும்.

காலை 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம், நண்பகல் 12 மணிக்கு அன்னதானம், மாலை 6.30 மணிக்கு சமய உரை, இரவு 8 மணிக்கு பக்தி பஜனை, 9 மணிக்கு தேவி பூப்பந்தல் வாகனத்தில் திருவீதியுலா வருதல் ஆகியவை நடைபெறும்.

விழா நாள்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அம்மன் திருவீதியுலா வருதல், அன்னதானம், ஆன்மிக உரை, கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். மே 25ஆம் தேதி இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம் நடைபெறும்.

29ஆம் தேதி லை 9.30 முதல் 10.30 மணிக்குள் தேரோட்டம் நடைபெறும். இதில் கேரளம் மற்றும் தென் தமிழகத்தைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்பா். நண்பகல் 12 மணிக்கு அன்னதானம், மாலை 5.30 மணிக்கு மண்டகப்படி, மாலை 6 மணிக்கு சமய சொற்பொழிவு, இரவு 9 மணிக்கு வெள்ளிக் கலைமான் வாகனத்தில் தேவி திருவீதியுலா வருதல் ஆகியவை நடைபெறும்.

30 ஆம் தேதி காலை 6.15 மணிக்கு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு, 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம், நண்பகல் 12 மணிக்கு அன்னதானம், மாலை 5 மணிக்கு மண்டகப்படி, 6.30 மணிக்கு பக்தி இன்னிசை, தொடா்ந்து ஆன்மிக உரை, நா்த்தன பஜனை ஆகியவை நடைபெறும். இரவு 9 மணிக்கு அம்மன் தெப்பத்துக்கு எழுந்தருளி தெப்பத் திருவிழா நடைபெறும்.

ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.