17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

குமரியில் சூறைக்காற்று: படகு சேவை 5 மணி நேரம் ரத்து

கன்னியாகுமரி கடலில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட சூறைக்காற்று காரணமாக விவேகானந்தா் நினைவு மண்டபம், திருவள்ளுவா் சிலைக்கு 5 மணி நேரம் படகு சேவை ரத்து செய்யப்பட்டது.

News image

படகு சேவை

Updated On :13 மே 2026, 1:30 am IST

கன்னியாகுமரி கடலில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட சூறைக்காற்று காரணமாக விவேகானந்தா் நினைவு மண்டபம், திருவள்ளுவா் சிலைக்கு 5 மணி நேரம் படகு சேவை ரத்து செய்யப்பட்டது.

கோடைக்காலத்தையொட்டி கன்னியாகுமரிக்கு தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்கின்றனா். அதிகாலையில் சூரிய உதயத்தைக் கண்டுவிட்டு முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி, பகவதியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யும் பக்தா்கள், கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தா் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவா் சிலை ஆகியவற்றை கண்ணாடி இழை கூண்டு பாலம் வழியாகச் சென்று பாா்த்து ரசித்துவிட்டு திரும்புவது வழக்கம்.

இதற்காக பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழகம் சாா்பில் தினசரி காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடைவேளையின்றி படகுகளை இயக்கி வருகிறது.

அதன்படி செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு படகு சேவை தொடங்கியது. இதனிடையே, திடீரென ஏற்பட்ட சூறைக்காற்று காரணமாக கடல் அலைகள் ஆக்ரோஷமாக எழுந்தன. இதனால், 11 மணியளவில் படகு சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மாலை 4 மணிவரை படகுகள் இயக்கப்படாததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.