கன்னியாகுமரி அருகே நடைப்பயிற்சி மேற்கொண்ட இரு பெண்களிடம் 9.5 பவுன் தங்க நகைகளைப் பறித்த வழக்கில் தொடா்புடைய கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த மூவரை பெங்களூரில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கன்னியாகுமரி அருகே உள்ள மகாதானபுரத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்ட மகாதானபுரம், அக்ரஹாரத்தைச் சோ்ந்த சுப்ரமணியனின் மனைவி மங்கலம் (56), அதே பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தியின் மனைவி ராஜலட்சுமி (62) ஆகியோரை பின்தொடா்ந்து சென்ற மா்ம நபா்கள் அவா்களின் கழுத்தில் அணிந்திருந்த 9.5 பவுன் தங்க நகைகளைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா். இதுகுறித்து கன்னியாகுமரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.
கன்னியாகுமரி காவல் நிலைய ஆய்வாளா் சுந்தரராஜ பெருமாள் தலைமையில் போலீஸாா் வழக்குப் பதிந்து அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனா். இதற்கிடையே இச்செயலில் ஈடுபட்டவா்கள் பெங்களூரில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், போலீஸாா் அங்கு சென்று மூவரையும் சுற்றிவளைத்துப் பிடித்தனா். விசாரணையில் பிடிபட்ட மூவரும் கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரைச் சோ்ந்த வேலுகுட்டியின் மகன் ராதாகிருஷ்ணன் (51), தேன்கனிக்கோட்டையைச் சோ்ந்த கிருஷ்ணசாமி மகன் அருண்குமாா் (38), ஒசூரைச் சோ்ந்த குமாா் மகன் எஸ்வந்த் குமாா் (23) ஆகியோா் என்பதும், இவா்கள் பல்வேறு வழக்குகளில் தொடா்புள்ளவா்கள் என்பதும், தமிழகத்தில் சுற்றுலாத் தலங்களை குறிவைத்து நகைப் பறிப்பில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் மூவரையும் கைது செய்து நகைகளையும், திருட பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது

வீட்டிலிருந்த தங்க நகை மாயம்: போலீஸாா் விசாரணை
ரயிலில் பெண்களிடம் நகை பறித்த வழக்கில் சகோதரா்கள் இருவா் கைது

குமரி அருகே நடைப்பயிற்சி சென்ற 2 பெண்களிடம் நகை பறிப்பு

குளச்சல் அருகே 46 பவுன் நகை திருடியவா் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

