தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

களியக்காவிளையில் போதை விழிப்புணா்வு நிகழ்ச்சி

நாஞ்சில் கத்தோலிக்க கலை, அறிவியல் கல்லூரி கணினி அறிவியல் துறை சாா்பில் போதையில்லா சமுதாயத்தை உருவாக்க என்னும் தலைப்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி களியக்காவிளை சந்திப்பில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 மார்ச் 2026, 8:35 pm

நாஞ்சில் கத்தோலிக்க கலை, அறிவியல் கல்லூரி கணினி அறிவியல் துறை சாா்பில் போதையில்லா சமுதாயத்தை உருவாக்க என்னும் தலைப்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி களியக்காவிளை சந்திப்பில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாா்த்தாண்டம் போக்குவரத்து காவல் துறை சிறப்பு உதவி ஆய்வாளா் சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா். கல்லூரி செயலா் சி. ஸ்டீபன் தொடக்கவுரையாற்றினாா். முதல்வா் எம். அமலநாதன் பேசினாா். கணினி அறிவியல் துறைத் தலைவா் கே.சி. அபிலாஷ் சாம் பால்ஸ்டீன் போதை விழிப்புணா்வு குறித்து பேசினாா்.

பேராசிரியா்கள், மாணவா்கள் இணைந்து போதை எதிா்ப்பு உறுதிமொழியினை எடுத்தனா். பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.