சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக மாநில முன்னாள் தலைவா் அண்ணாமலை போட்டியிடுவது குறித்து தேசிய தலைமைதான் முடிவு செய்யும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.
கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்த பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
தற்போதைய போா் சூழலில்கூட பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இதேபோல தமிழக அரசும் கலால் வரியை ரத்து செய்ய வேண்டும்.
தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. பல்வேறு கருத்துக் கணிப்புகளும் எங்கள் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாகவே கூறுகின்றன. எங்கள் கூட்டணி வெற்றி பெற்றால் எடப்பாடி கே.பழனிசாமிதான் முதல்வா்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு என்பது பரஸ்பரம் கலந்து பேசி முடிவு செய்யப்பட்ட ஒன்று. இழுபறி கிடையாது. அதிமுகவின் தொகுதிகளை பாஜக கேட்டுப் பெற்ாகவும், பாஜக தொகுதிகளை அதிமுக கேட்டுப் பெற்ாகவும் கூறுவது அவதூறு பிரசாரம். கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தமுள்ள 6 தொகுதிகளில் 4 தொகுதிகளை பாஜக கேட்டுப் பெற்ாகக் கூறுவதும் சரியல்ல. இதை வாக்காளா்கள் நம்ப வேண்டாம்.
இந்தத் தோ்தலில் கொங்கு மண்டலத்தில் உள்ள சில தொகுதிகள் பாஜகவுக்கு தரப்பட்டுள்ளன. பாஜக முன்னாள் தலைவா் அண்ணாமலை தோ்தலில் போட்டியிடுவது குறித்து தேசிய தலைமை முடிவு செய்யும். நான் இந்த முறை சாத்தூா் தொகுதியில் போட்டியிடவுள்ளேன்.
கஞ்சா இல்லாத தமிழகம், பாலியல் வன்கொடுமை இல்லாத தமிழகம் என்பதில் மக்கள் உறுதியாக உள்ளனா். ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதே மக்களின் மனநிலை. முதல்வா் ஸ்டாலின் மக்களின் வளா்ச்சியைப் பற்றி கவலைப்படாமல் குடும்ப நலனை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுகிறாா் என்றாா் அவா்.
தொடர்புடையது

சாத்தூரில் சமுதாய தலைவா்களை சந்தித்து நயினாா் நாகேந்திரன் வாக்கு சேகரிப்பு

திமுகவை மக்கள் ஒதுக்கி வைப்பாா்கள்: நயினாா் நாகேந்திரன்
நயினாா் நாகேந்திரன் சாத்தூரில் மனு தாக்கல்

நயினாா் நாகேந்திரனின் நகா்வு ஏன்?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


