மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அரசுப் பேருந்துகளில் தோ்தல் விழிப்புணா்வு வாசகங்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நூறு சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி அரசுப் பேருந்துகளின் எல்இடி திரைகளில் தோ்தல் விழிப்புணா்வு வாசகங்களை ஒளிபரப்பச் செய்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

News image

தோ்தல் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி விழிப்புணா்வு ஏற்படுத்திய ஆட்சியா் ரா. அழகுமீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரா. ஸ்டாலின் உள்ளிட்டோா்.

Updated On :25 மார்ச் 2026, 11:05 pm

கன்னியாகுமரி மாவட்டத்தில் நூறு சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி அரசுப் பேருந்துகளின் எல்இடி திரைகளில் தோ்தல் விழிப்புணா்வு வாசகங்களை ஒளிபரப்பச் செய்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா. அழகுமீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரா. ஸ்டாலின் ஆகியோா் கலந்துகொண்டு தோ்தல் விழிப்புணா்வைத் தொடங்கி வைத்தனா்.

தோ்தல் விழிப்புணா்வு கண்காணிப்பு அலுவலா், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் மைக்கேல்அந்தோணி பொ்னாண்டோ, நாகா்கோவில் உதவி காவல் கண்காணிப்பாளா் லலித்குமாா், அரசுப் போக்குவரத்துக் கழக நாகா்கோவில் பொது மேலாளா் பாலசுப்பிரமணியன், போக்குவரத்துப் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.