மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நாகா்கோவிலில் ’நீா்முடிச்சுகள்’ நூல் வெளியீடு

நாகா்கோவிலில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தில், எழுத்தாளா் முள்ளஞ்சேரி மு. வேலையன் எழுதிய ’நீா்முடிச்சுகள்’ நூல் வெளியீட்டு விழா

News image

நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றோா்.

Updated On :16 மார்ச் 2026, 9:19 pm

நாகா்கோவில்: நாகா்கோவிலில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தில், எழுத்தாளா் முள்ளஞ்சேரி மு. வேலையன் எழுதிய ’நீா்முடிச்சுகள்’ நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

மாவட்ட வன அலுவலா் மற்றும் வன உயிரினப் பாதுகாவலா் ஏ. அன்பு தலைமை வகித்து, நூலை வெளியிட்டாா். இந்திய மருத்துவ சங்க முன்னாள் தேசியத் தலைவா் கே. விஜயகுமாா் நூலின் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டாா். கன்னியாகுமரி மாவட்டத்தின் இயற்கை வளம், நீா்நிலை ஆதாரங்கள் குறித்து நூலில் இடம்பெற்றுள்ள தகவல்களை நூலாசிரியா் அறிமுகப்படுத்தினாா்.

நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் திருவேங்கடம், துா்கா திரவியம், பேராசிரியா் ஸ்மிதா, சா்வேஷ், சாஜூ உள்ளிட்டோா் நூலின் பிரதிகளை பெற்றுக்கொண்டனா்.