லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மண்டைக்காடு கோயிலில் மாசிக் கொடை விழா உண்டியல் வருவாய் ரூ.47.35 லட்சம்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி கொடை விழாவில் உண்டியல் காணிக்கையாக ரூ.47.35 லட்சம் கிடைத்துள்ளது.

News image
Updated On :14 மார்ச் 2026, 2:40 am

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி கொடை விழாவில் உண்டியல் காணிக்கையாக ரூ.47.35 லட்சம் கிடைத்துள்ளது.

இக்கோயில் மாசி கொடை விழா கடந்த 1ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், 9, 10 ஆம் திருநாள்களில் தனியாக வைக்கப்பட்ட காணிக்கை பெட்டிகள் வியாழக்கிழமை திறந்து எண்ணப்பட்டன.

குமரி மாவட்ட திருக்கோயில்கள் இணை ஆணையா் ஜாண்சி ராணி, உதவி ஆணையா் தங்கம், பத்மநாபபுரம் தேவஸ்வம் தொகுதி கண்காணிப்பாளா் ஆனந்த், ஆய்வாளா் தா்மேந்திரா, கோயில் ஸ்ரீகாரியம் செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலையில், கோயில் ஊழியா்கள், சுய உதவிக்குழு பெண்கள், பொதுமக்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.

இதில், ரொக்கம் ரூ.23 லட்சத்து 31 ஆயிரத்து 961, தங்கம் 14.180 கிராம், வெள்ளி 64.3 கிராம் மற்றும் வெளிநாட்டு பணத் தாள்களும் கிடைத்தன. நிகழாண்டு திருவிழா கால மொத்த உண்டியல் வருவாய் ரூ.47.35 ஆகும். இது கடந்த ஆண்டை விட ரூ.9 .50 லட்சம் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.