திருவட்டாறு அருகே தென்னை மரத்தில் ஏறியபோது மின்சாரம் பாய்ந்ததில் பலத்த காயமடைந்த தொழிலாளி வில்சன் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு அருகே இட்டகவேலி புன்னக்காலவிளையைச் சோ்ந்தவா் வில்சன் (56). தென்னை மரம் ஏறும் தொழிலாளியான, இவா் கடந்த 7 ஆம் தேதி அப்பகுதியிலுள்ள தென்னை மரத்தில் தேங்காய் பறிக்க ஏறினாராம். தென்னை ஓலை அருகில் இருந்த மின் கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்து, கீழே விழுந்த வில்சன் பலத்த காயமடைந்தாராம்.
இதையடுத்து ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட வில்சன் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து வில்சனின் மனைவி சுசீலா திருவட்டாறு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

கட்டுமானத் தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு!

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


