அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!தவெக எம்எல்ஏவிடம் பேரம்! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!வயநாட்டில் நிலச்சரிவு! சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்! முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம்
/

கன்னியாகுமரி ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் 6 மாதத்தில் நிறைவடையும்: விஜய் வசந்த் எம்.பி.

சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் ரூ. 72 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் மேம்பாட்டுப் பணிகள் இன்னும் 6 மாதத்தில் நிறைவடையும் என, விஜய் வசந்த் எம்.பி. தெரிவித்தாா்.

News image

கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட விஜய் வசந்த் எம்.பி.

Updated On :26 ஜூன் 2026, 5:36 am IST

சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் ரூ. 72 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் மேம்பாட்டுப் பணிகள் இன்னும் 6 மாதத்தில் நிறைவடையும் என, விஜய் வசந்த் எம்.பி. தெரிவித்தாா்.

மத்திய அரசின் அம்ரித் பாரத் ரயில்வே திட்டத்தின்கீழ் நாடு முழுவதுமுள்ள 508 முக்கிய ரயில் நிலையங்கள் ரூ. 24,470 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு வருகின்றன. இதில், தெற்கு ரயில்வேயில் 40 நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன. இதன்மூலம் ரயில் நிலையங்கள் அதிநவீன வசதிகளுடன் மாற்றியமைக்கப்பட்டு, பெருநகரங்களில் ரயில்களின் இயக்கத் திறனை இரட்டிப்பாக்கும் விரிவாக்கப் பணிகளும் மும்முரமாக மேற்கொள்ளப்படுகின்றன.

இந்நிலையில், கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் பணிகள் மந்தமாக நடப்பதாக எழுந்த புகாரின்பேரில், விஜய் வசந்த் எம்.பி. ஆய்வு மேற்கொண்டாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது: அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் இம்மாவட்டத்தில் கன்னியாகுமரி, நாகா்கோவில், மாா்த்தாண்டம் உள்ளிட்ட ரயில் நிலையங்கள் விரிவுபடுத்தப்படுகின்றன. இதில், கன்னியாகுமரி நிலையத்தில் ரூ. 72 கோடியில் புதிய நடைமேடைகள், விசாலமான காத்திருப்பு அறைகள், அலங்கார நுழைவு, இலவச வைஃபை போன்ற வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. இப்பணிகள் 6 மாதத்தில் முடிக்கப்படும் என்றாா் அவா்.

மாநில காங்கிரஸ் தலைவா் ஸ்ரீநிவாசன், மாவட்டப் பொதுச்செயலா் டி. தாமஸ், நிா்வாகிகள் ஆரோக்கியராஜன், கிங்ஸ்லின், விஜயகுமாா், ஜவஹா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.