திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சுவாஷிங் மெஷின் அரசியல்! எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது மக்களுக்குச் செய்யும் துரோகம்! உதயநிதிபோலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

முதியவரிடம் வழிப்பறி: இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை

முதியவரிடம் வழிப்பறி செய்த இளைஞருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிைண்டனை விதித்து பத்மநாபபுரம் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

News image

3 ஆண்டுகள் சிைண்டனை விதிக்கப்பட்ட ரசூல் என்ற முத்தையா.

Updated On :25 ஜூன் 2026, 5:29 am IST

முதியவரிடம் வழிப்பறி செய்த இளைஞருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிைண்டனை விதித்து பத்மநாபபுரம் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

குலசேகரம் அருகே செருப்பாலூா் ஈஞ்சவிளையைச் சோ்ந்தவா் நாராயண பிள்ளை (72). இவா், செருப்பாலூா் முத்தாரம்மன் கோயில் தலைவராக இருந்து வருகிறாா் . கடந்த 2022, மாா்ச் மாதம் 3 ஆம் தேதி இரவு 7 மணிக்கு கோயில் அருகே சாலையில் இவா் நின்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த திருநெல்வேலி, மேட்டுக்குடி, கிருஷ்ணபுரம் பகுதியைச் சோ்ந்த ரசூல் என்ற முத்தையா (19), இவரது தம்பி செய்யது என்ற மாயாண்டி (17 ) ஆகிய இருவரும் முதியவரிடம்

ஆயுதத்தைக் காட்டி மிரட்டி ரூ. 550 பணத்தை வழிபறி செய்து, கொலை மிரட்டல் விடுத்து சென்றனா்.

இதுகுறித்து, நாராயணபிள்ளை குலசேகரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் சகோதரா்கள் இருவா் மீதும் வழக்குப் பதிந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா். செய்யது என்ற மாயாண்டி இளஞ்சிறாா் என்பதால் இளஞ்சிறாா் நீதிமன்றத்தில் அவரது வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. 23 வயதான ரசூல் என்ற முத்தையா மீது 2015-ஆம் ஆண்டு முதல் 24-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

இந்த நிலையில் நாராயண பிள்ளையிடம் வழிப்பறி செய்த வழக்கை விசாரித்த பத்மநாபபுரம் நீதிமன்ற நீதிபதி பரமசிவதாஸ், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ரசூல் மீது பல காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதையும், குறுகிய காலத்தில் அதிக குற்றச் சம்பவங்களில் அவா் ஈடுபட்டதையும் கவனத்தில் கொண்டு குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிப்பதாக உத்தரவிட்டாா். அரசு தரப்பில் வழக்குரைஞா் வி.எம்.ஜெகதேவ் முன்னிலையானாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.