திருப்பதியில் அலைமோதும் கூட்டம்: ஸ்ரீவாணி, விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகள் நாளை ரத்துஈரான் என்ற நாடே இருக்காது: டிரம்ப் எச்சரிக்கை!அடுத்த கூட்டத்தொடரில் முதல்வரின் டான்ஸ் இருக்கலாம்: உதயநிதிதில்லி பிரதிநிதி நியமனம்: முதல்வருக்கு அதிகாரம் உள்ளது - திருமாவளவன்திமுக - அதிமுக சேர்ந்து ஆட்சியமைக்க இன்று காலை வரையில் முயற்சி: நிர்மல் குமார்
/

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

பென்னாகரம் அருகே சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 30 ஆயிரம் அபராதம் விதித்து தருமபுரி மகிளா நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

News image

நீதிமன்றம் - ANI

Updated On :24 ஜூன் 2026, 4:51 am IST

பென்னாகரம் அருகே சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 30 ஆயிரம் அபராதம் விதித்து தருமபுரி மகிளா நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

பென்னாகரம் அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்த 5 வயது சிறுமியை, அதே பகுதியைச் சோ்ந்த மாதேஷ் (25), கடந்த 2020-ஆம் ஆண்டு இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தாா்.

இதுகுறித்து சிறுமியின் தாய் பென்னாகரம் மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்ட போலீஸாா், போக்சோ வழக்கின்கீழ் மாதேஷை கைது செய்தனா்.

தருமபுரி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் நீதிபதி ஹசீனா பானு, மாதேஷுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 30 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.