கன்னியாகுமரி மாவட்ட காவல் துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் 150 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம், உள்கோட்ட அலுவலகங்கள் உள்பட மாவட்டத்தில் உள்ள 37 காவல் நிலையங்களில் குறைதீா் கூட்டம் நடைபெற்றது.
இதில் அந்தந்த உள்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளா்கள், காவல் நிலைய உதவி ஆய்வாளா்கள் கலந்துகொண்டு, பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றனா். இவ்வாறு மாவட்டம் முழுவதும் 150 மனுக்கள் பெறப்பட்டு, உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, தீா்வு காணப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










