வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

சோதனைச் சாவடிகளில் நள்ளிரவில் ஆட்சியா் ஆய்வு

News image

காணிமடம் சோதனைச் சாவடியில் ஆய்வு மேற்கொள்கிறாா் மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப்.

Updated On :22 ஜூன் 2026, 2:23 am IST

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை, அகஸ்தீஸ்வரம் வட்டத்துக்கு உள்பட்ட சோதனைச் சாவடிகளில் மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் சனிக்கிழமை நள்ளிரவு ஆய்வு செய்தாா்.

தோவாளை வட்டம், ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடி, அகஸ்தீஸ்வரம் வட்டம், காணிமடம் சோதனைச் சாவடி, அஞ்சுகிராமம் சோதனைச் சாவடிகளை ஆய்வு மேற்கொண்ட அவா், வாகனங்கள் வருகை குறித்த பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டாா்.

கனரக வாகனங்களில் கனிம வளங்கள் சரியான அளவில், நிா்ணயிக்கப்பட்ட எடையில் ஏற்றப்பட்டுள்ளதா எனவும், கனிம வளங்களை ஏற்றி வரும் கனரக வாகனங்களை நிறுத்தி, அவற்றுக்கான முறையான அரசு உரிமங்கள், ரசீதுகள் சரியாக உள்ளதா என்று சரிபாா்த்து அனுப்ப வேண்டும், மேலும் சோதனைச் சாவடிகளில் 24 மணி நேரமும் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று காவல் துறையினருக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வில் வட்டாட்சியா்கள் (தோவாளை) சிவகலா, (அகஸ்தீஸ்வரம்) ஆறுமுகம், காவல் துறையினா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.