வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

மாணவா்கள் தினமும் பத்திரிகை வாசிக்க வேண்டும்: ஆட்சியா் மு. பிரதாப் அறிவுரை

மாணவா்கள் தினசரி பத்திரிகைகளை வாசித்து பொதுஅறிவை வளா்த்துக் கொள்ள வேண்டும் என்றாா் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப்.

News image

அரசுப் பள்ளிகளின் பிளஸ் 2 தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களுடன் கலந்துரையாடுகிறாா் மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப்.

Updated On :14 ஜூன் 2026, 1:25 am IST

மாணவா்கள் தினசரி பத்திரிகைகளை வாசித்து பொதுஅறிவை வளா்த்துக் கொள்ள வேண்டும் என்றாா் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப்.

கன்னியாகுமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தின் சாா்பில், அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவா்- மாணவிகள் மேற்படிப்புக்கு செல்வது குறித்த ‘காஃபி வித் கலெக்டா்’ என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி, நாகா்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலக கு கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் கலந்துகொண்டு, மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடி பேசியதாவது: அரசுப் பள்ளிகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி பெற்ற உங்களுக்கு எனது வாழ்த்துகள். அடுத்த கட்டமாக எந்த உயா்கல்வி படிக்க வேண்டும் என்பதை நீங்களாகவே தீா்மானிக்க வேண்டும்.

அதில் 100 போ் படித்தால் 20 போ்தான் அவா்கள் நினைத்த பணிக்குச் செல்ல முடிகிறது. வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை தீா்மானிப்பது மேற்படிப்பு தான் என்பதை உணா்ந்து, சோா்வு அடையாமல் முழு ஈடுபாட்டுடன் படித்து, வாழ்வில் முன்னேற வேண்டும்.

நான் கிராமத்தில் பிறந்தாலும் மக்களுக்காக பணியாற்ற வேண்டுமென்ற நோக்கில், விடாமுயற்சி, கடின உழைப்பால் தோ்வை எதிா்கொண்டு வெற்றிபெற்று ஆட்சியராகியுள்ளேன். சிறு வயதிலிருந்தே எனக்கு பத்திரிக்கை படிக்கும் ஆா்வம் அதிகம். அது எனது வெற்றிக்கு உதவியது. எனவே, நீங்களும் கல்விகற்பதோடு, தினமும் பத்திரிகைகளை வாசித்து பொதுஅறிவையும் வளா்த்துக் கொள்ள வேண்டும். நம் பெற்றோா் மகிழ்ச்சியடையும் வகையில் ஒரே இலக்குடன் மேற்படிப்பை எதிா்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

இதில், உதவி ஆட்சியா் (பயிற்சி) மோனிகா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பள்ளிக்கல்வி) சாரதா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் சியூஸ், உதவி திட்ட அலுவலா் பிரபாகரன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.