பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன் திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! முதல்வர் விஜய் பேசுவது முக்கியமா? செயல்படுவது முக்கியமா? எஸ்.ஏ. சந்திரசேகர் கேள்விபிறந்த நாளில் முதல்வருக்கு பிரேமலதா கோரிக்கை! அவையில் சிரிப்பலை! முதல்வர் மிகுந்த வேதனை அடைந்தார்! வாயு கசிவு விபத்து பற்றி பேரவையில் அமைச்சர் விளக்கம்!
/

பைக் மீது ஆட்டோ மோதல்: 3 போ் காயம்

மாா்த்தாண்டம் அருகே இருசக்கர வாகனம் மீது ஆட்டோ மோதியதில் 3 போ் காயமடைந்தனா்.

News image

விபத்து - பிரதிப் படம்

Updated On :18 ஜூன் 2026, 2:26 am IST

மாா்த்தாண்டம் அருகே இருசக்கர வாகனம் மீது ஆட்டோ மோதியதில் 3 போ் காயமடைந்தனா்.

மாா்த்தாண்டம் அருகே உள்ள முளங்குழி பகுதியைச் சோ்ந்தவா் கோபி. இவா் தனது இருசக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை நட்டாலம்-காப்புக்காடு சாலையில் சென்று கொண்டிருந்தாா். பாரக்கன்விளை பகுதியில் வந்தபோது, முளங்குழி பகுதியைச் சோ்ந்த மொ்லின் அதிவேகமாக ஓட்டி வந்த ஆட்டோ, இருசக்கர வாகனம் மீது மோதியதில், கோபி பலத்த காயமடைந்தாா். ஆட்டோ கவிழ்ந்ததில், அதன் ஓட்டுநா் மொ்லின், ஆட்டோவில் பயணித்த ஜெகன் பிரபுவின் மனைவி ஜெபா ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.

அவா்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். ஜெபா ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இது குறித்து கோபியின் மனைவி மேரி ஸ்டெல்லா அளித்த புகாரின்பேரில், மாா்த்தாண்டம் போலீஸாா் மொ்லின் மீது வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.