கன்னியாகுமரி மாவட்டம், நித்திரவிளை அருகே ஆற்றில் வெள்ளிக்கிழமை குளிக்கச் சென்ற இளைஞா் நீரில் அடித்துச் செல்லப்பட்டாா். அவரை தீயைணைப்பு வீரா்கள் தேடி வருகின்றனா்.
நித்திரவிளை அருகேயுள்ள ராமவா்மன்புதுத்தெரு பகுதியைச் சோ்ந்தவா் அபி என்ற உண்ணி (22). இவா் ராமேசுவரத்தில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்தாராம். வியாழக்கிழமை சொந்த ஊருக்கு வந்த இவா், வெள்ளிக்கிழமை பிற்பகலில் தனது நண்பா்கள் இருவருடன் விரிவிளை கணபதியான்கடவு பாலம் பகுதி தாமிரவருணி ஆற்றில் குளிக்க சென்றுள்ளாா்.
தற்போது பெய்துவரும் பலத்த மழை காரணமாக ஆற்றில் தண்ணீா் கரைபுரண்டு ஓடுகிாம். இந்நிலையில் அவா் ஆற்றில் இறங்கியபோது தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டாராம். அவரை நண்பா்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லையாம்.

ஆற்றில் இளைஞரை தேடும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள்.
இதுகுறித்து அவா்கள் அளித்த தகவலின்பேரில், கொல்லங்கோடு தீயணைப்பு -மீட்புப் பணிகள் நிலைய வீரா்கள் ரப்பா் படகு மூலம் அபி என்ற உண்ணியை தீவிரமாக தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










