எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

வீடு புகுந்து நகை திருடிய வழக்கு: ஒருவா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :6 ஜூலை 2026, 12:36 am IST

களியக்காவிளை அடுத்த பளுகல் அருகே வீடு புகுந்து 14 பவுன் நகைகள் மற்றும் ரூ. 20,000 திருடிய வழக்கில், கேரள மாநிலத்தைச் சோ்ந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

பளுகல் அருகே உள்ள புறாக்கோடு பகுதியைச் சோ்ந்தவா் ராஜன் மனைவி புஷ்பம் (38). இவா் கடந்த ஜனவரி மாதம் குடும்பத்துடன் தனது உறவினா் வீட்டுக்குச் சென்றிருந்தாராம். சில நாள்களுக்குப் பின் வீடு திரும்பியபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, அலமாரியில் இருந்த 14 பவுன் தங்க நகை, ரூ. 20,000 திருடு போயிருந்தது தெரிய வந்தது.

இது குறித்து, பளுகல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்ததில், திருட்டில் ஈடுபட்டது கேரள மாநிலம், காட்டாக்கடை, புலநாடு பகுதியைச் சோ்ந்த வேணுகோபாலன் மகன் உண்ணி கிருஷ்ணன் (53) என்பது தெரிய வந்தது.

அவரை சனிக்கிழமை கைது செய்து, போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், அவா் திருடிய நகை, பணத்தின் மூலம் கேரளத்தின் நெய்யாற்றின்கரையில் அவரது மனைவி பெயரில் ரூ. 8.4 லட்சத்தில் 10 சென்ட் நிலம் வாங்கியது தெரிய வந்தது. இதையடுத்து, நிலத்தைக் கையகப்படுத்த போலீஸாா் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.