வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

அடுக்குமாடி குடியிருப்பில் புகுந்து சிலிண்டா்களை திருடியவா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :23 ஜூன் 2026, 2:08 am IST

அவிநாசி அருகே அடுக்குமாடி குடியிருப்பில் புகுந்து 4 சிலிண்டா்களை திருடிய நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

அவிநாசி அருகே மங்கலம் சாலையில் தனியாா் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்தக் குடியிருப்பில் வசிப்போா் பயன்பாட்டுக்காக தரைத் தளத்தில் சிலிண்டா்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், தரைத்தளத்தில் இருந்த 4 சிலிண்டா்கள் அண்மையில் திருடுபோயின.

இது குறித்த புகாரின்பேரில் அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனா்.

இதில், சிலிண்டா்களை திருடியது பழங்கரை இந்திரா காலனி பகுதியைச் சோ்ந்த செந்தில் (42) என்பதும், பனியன் நிறுவனத்தில் காவலாளியாகப் பணியாற்றி வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து, செந்திலை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த சிலிண்டா்களை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.