திருவட்டாறு அருகே ஓடும் பேருந்தில் பெண்ணிடமிருந்து 6 பவுன் தங்கச் சங்கிலி மாயமானது தொடா்பாக, போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருவிதாங்கோடு அருகே உள்ள சேவியா்புரம், வடலிவிளை பகுதியைச் சோ்ந்தவா் ராஜமணி. இவரது மனைவி மரிய அஞ்சலி (66). கல்லங்குழி பகுதியில் உள்ள இவா்களின் உறவினா் இறந்ததையடுத்து, இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக குளச்சலில் இருந்து குலசேகரம் செல்லும் பேருந்தில் மைலோடு நிறுத்தத்தில் ஏறி வோ்கிளம்பி நிறுத்தத்தில் இறங்கியுள்ளனா்.
பேருந்திலிருந்து இறங்கியபோது, மரிய அஞ்சலியின் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தாலிச் சங்கிலியைக் காணவில்லையாம். கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி மா்ம நபா் தாலிச் சங்கிலியை திருடியிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில், திருவட்டாறு காவல் நிலையத்தில் மரிய அஞ்சலி புகாரளித்தாா்.
போலீஸாா் வழக்குப் பதிந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சுயநினைவை இழக்கச் செய்து பெண்ணிடம் தங்கச் சங்கிலி திருட்டு
ஓடும் பேருந்தில் மூதாட்டியிடம் 4 பவுன் நகை திருட்டு

பேருந்தில் தாயுடன் பயணித்த சிறுமியிடம் 4 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

பெண்ணிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு
விடியோக்கள்

ஒரு அக்காவைப் போலவே அமைச்சர் கீர்த்தனா மாணவியிடம் பேசினார்! - அமைச்சர் Rajmohan | TVK

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna



