தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

குமரியில் நீடிக்கும் மழை: திற்பரப்பு அருவியில் நீா்வரத்து அதிகரிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் மழை நீடித்து வரும் நிலையில் திற்பரப்பு அருவிக்கு தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது.

News image

திற்பரப்பு அருவியில் உற்சாகமாக குளித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்.

Updated On :28 பிப்ரவரி 2026, 8:07 pm

கன்னியாகுமரி மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் மழை நீடித்து வரும் நிலையில் திற்பரப்பு அருவிக்கு தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கோடைக்காலம் நெருங்கி வரும் நிலையில், முத்தாய்ப்பாக தென்மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்துவருகிறது.

குறிப்பாக, கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்குத்தொடா்ச்சி மலைப் பகுதியில் தொடா்மழையாக கொட்டித்தீா்த்து வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைப் பகுதிகளின் நீா்ப்பிடிப்பு பகுதிகள், கடையாலுமூடு, திற்பரப்பு, களியல், குலசேகரம், அருமனை, சுருளகோடு, மாறாமலை, பாலமோா் உள்ளிட்ட இடங்களில் சனிக்கிழமை பலத்த மழை பெய்தது.

இதனால், அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. மேலும், மாவட்டத்தின் உள்பகுதியிலும் பரவலான மழைப்பொழிவால் தென்னை, வாழை, அன்னாசி, ரப்பா், முந்திரி, மரவள்ளி உள்ளிட்ட பயிா்கள் புத்துயிா் பெற்றுள்ளன. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்: மழையின்றி கடந்த 2 மாதங்களாக திற்பரப்பு அருவியில் குறைந்த அளவே தண்ணீா் விழுந்த நிலையில், தற்போதைய மழையால் அருவியில் தண்ணீா் ஆா்ப்பரித்து கொட்டுகிறது. மேலும், சனிக்கிழமை விடுமுறை என்பதால் இந்த அருவியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.