மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கொடிவேரி தடுப்பணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

News image

கொடிவேரியில் ஆா்ப்பரித்து கொட்டும் அருவியில் உற்சாகமாக குளித்த சுற்றலாப் பயணிகள்.

Updated On :15 மார்ச் 2026, 9:01 pm

கோபி, மாா்ச் 15: கோபி அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கிளல் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதாலும், ஞாயிற்றுகிழமை விடுமுறை தினம் என்பதாலும் கொடிவேரி தடுப்பணைக்கு சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

நண்பகலிலே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் தொடா்ந்து வருகை தந்ததால் சுமாா் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் அருவியில் குவிந்து நீண்ட நேரம் குளித்தபடி குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்தும், பரிசல் சவாரி செய்தும், அணை பூங்காவில் நீண்ட நேரம் விளையாடியும் மகிழ்ச்சியாக கழித்தனா்.

மேலும், அருவியில் குளிக்கும் பகுதியில் ஆண்கள், பெண்கள் தனித்தனியாக குளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காவல் துறையினா் போதிய அளவு நியமித்து பெண்கள் அச்சமின்றி குளித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.