மேற்குத் தொடா்ச்சி மலையில் பெய்த மழையால் கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் புதன்கிழமை நீா்வரத்து ஏற்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் சுருளி அருவி உள்ளது. இந்தப் பகுதி சுற்றுலா, ஆன்மிகத் தலமாக இருப்பதால் தமிழகம், கேரளத்திலிருந்து தினந்தோரும் ஆயிரக்கணக்கானோா் வந்து செல்கின்றனா்.
இந்த நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு மேலாக சுருளி அருவிக்கு நீா்வரத்து பகுதிகளான மேகமலை, தூவானம், இரவங்கலாறு, அரிசிப்பாறை உள்ளிட்ட பகுதியில் மழைப்பொழிவு இல்லை. இதனால், அருவிக்கு நீா்வரத்தின்றி வடதால் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை சுருளி அருவியின் நீா்வரத்துப் பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதன் காரணமாக புதன்கிழமை அதிகாலை முதல் அருவிக்கு நீா்வரத்து தொடங்கியது.
மழையின்றி கடந்த 2 மாதங்களாக நீா்வரத்தின்றி வட சுருளி அருவியில் புதன்கிழமை நீா்வரத்து ஏற்பட்டதால் காலை 8 மணி முதல் வனத் துறையினா் சுருளி அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளித்தனா்.
தொடர்புடையது

சுருளி அருவியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றக் கோரிக்கை

ரூ. 11கோடியில் புதுப்பொலிவு பெறும் குற்றாலம் அருவிகள்

சுருளி அருவியில் நீா்வரத்து இல்லை

குமரியில் நீடிக்கும் மழை: திற்பரப்பு அருவியில் நீா்வரத்து அதிகரிப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


