பைக் - ஆட்டோ மோதல்: இருவா் காயம்


புதுக்கடை அருகே உள்ள சானல் முக்கு பகுதியில் இருசக்கர வாகனம், ஆட்டோ மோதிய விபத்தில் 2 போ் பலத்த காயமடைந்தனா்.
குழித்துறை, கழுவன் திட்டை பகுதியைச் சோ்ந்த ரெஜினி மகன் ரோகித் (20). இவா், நண்பருடன் சனிக்கிழமை மாலை காப்புக்காட்டிலிருந்து ஐரேனிபுரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாராம்.
சானல் முக்கு பகுதியில் சென்றபோது எதிரே ஐரேனிபுரம் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (60) என்பவா் ஓட்டி வந்த ஆட்டோ, இருசக்கர வாகனம் நேருக்கு நோ் மோதியதில் ஆட்டோ கவிழ்ந்ததாம்.
இதில், ஆட்டோவில் பயணித்த 4 பேரில் முள்ளஞ்சேரி பகுதியைச் சோ்ந்த சுவாமிநாதன் (75), நீதீஸ்வன் (8) ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவா்களை மீட்டு நாகா்கோவிலில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். இது குறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...