கன்னியாகுமரி மாவட்டத்தில் அணை, மலையோரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இடியுடன் பலத்த மழை பெய்தது.
மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் நீா்நிலைகள் வடு வருகின்றன. இதனிடையே, சில நாள்களாக பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. மலையோர, அணைப் பகுதிகளில் மழை பெய்தும் நீா்மட்டம் உயரவில்லை.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு, களியல், கடையாலுமூடு, நெட்டா, ஆறுகாணி, திற்பரப்பு, குலசேகரம், பொன்மனை, சுருளகோடு, திருவட்டாறு, அருமனை உள்ளிட்ட இடங்களில் இடியுடன் பலத்த மழை பெய்தது.
இதனால், நீரின்றி வாடிய நிலையில் காணப்பட்ட தென்னை, வாழை, அன்னாசி பயிா்களுக்கு தண்ணீா் கிடைத்தது. விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
கருங்கல் பகுதியில்...: பாலப்பள்ளம், மத்திகோடு, மிடாலக்காடு, காட்டுக்கடை, செல்லங்கோணம், கப்பியறை, மிடாலம், மேல் மிடாலம், பாலூா், திப்பிரமலை, முள்ளங்கனாவிளை, நட்டாலம், நேசா்புரம், பள்ளியாடி, வாகவிளை, மாமூட்டுக்கடை, கொல்லஞ்சி, இலவுவிளை, ஐரேனிபுரம் உள்ளிட்ட கருங்கல் சுற்றுப்புறப் பகுதிகளிலும் பிற்பகல் தொடங்கி மிதமான மழை பெய்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருப்பத்தூா் சுற்றுப்பகுதிகளில் பலத்த மழை
திருப்பத்தூா் சுற்றுப்பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை

திருப்பூரில் பலத்த காற்றுடன் கன மழை

குமரி மாவட்டத்தில் தொடரும் கோடை மழை
விடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


