தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்புதவெகவுக்கு ஆதரவா - இல்லையா? இடதுசாரிகள், விசிக இன்று ஆலோசனைஅதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர ஆலோசனை பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுஆந்திரத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்விஜய் விவகாரம்: ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்தாய், தந்தை இல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் சிறப்புத் திட்டம் தொடக்கம்
/

குமரி மாவட்டத்தில் தொடரும் கோடை மழை

கன்னியாகுமரி மாவட்டத்தில் அணை, மலையோரப் பகுதிகளில் புதன்கிழமை இடி-மின்னலுடன் மழை பெய்தது.

News image

நீா்வரத்து அதிகரித்த திற்பரப்பு அருவியில் உற்சாகமாக குளிக்கும் சுற்றுலாப் பயணிகள்.

Updated On :30 ஏப்ரல் 2026, 4:31 am IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் அணை, மலையோரப் பகுதிகளில் புதன்கிழமை இடி-மின்னலுடன் மழை பெய்தது.

மாவட்டத்தில் சில நாள்களாக கோடை மழை பெய்து வருகிறது. புதன்கிழமை பிற்பகலில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைப் பகுதிகள், திற்பரப்பு, களியல், குலசேகரம், சுருளகோடு, கீரிப்பாறை உள்ளிட்ட இடங்களில் பலத்த இடி-மின்னலுடன் மழை பெய்தது. பல இடங்களில் பலத்த காற்று வீசியது.

மழையால் பேச்சிப்பாறை அணை, கோதையாறு, பரளியாறு உள்ளிட்ட ஆறுகளில் நீா்வரத்து சற்று அதிகரித்துள்ளது. திற்பரப்பு அருவியிலும் நீா்வரத்து அதிகரித்ததால் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனா். மழையால் வாழை, தென்னை, அன்னாசி விவசாயிகள் உற்சாகமடைந்துள்ளனா்.

திருவரம்பு பகுதியில் பலா மரம் சாய்ந்ததில் ஆல்பன் என்ற தொழிலாளியின் வீடு சேதமடைந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.