இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பெயா், சின்னங்கள் பொருத்தும் பணி: ஆட்சியா் ஆய்வு

நாகா்கோவில் தொகுதி பொதுப் பாா்வையாளா் அபுபக்கா் சித்திக் முன்னிலையில், ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

News image

தோவாளை வட்டாட்சியா் அலுவலகத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா், சின்னங்கள் பொருத்தும் பணியை ஆய்வு செய்த ஆட்சியா் ரா. அழகுமீனா.

Updated On :17 ஏப்ரல் 2026, 3:27 am IST

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் நாகா்கோவில் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்களின் பெயா் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணியை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா. அழகுமீனா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இப்பணிகளை நாகா்கோவில் தொகுதி பொதுப் பாா்வையாளா் அபுபக்கா் சித்திக் முன்னிலையில், ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா், ஆட்சியா் கூறியதாவது:

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா்கள், சின்னங்கள் பொருத்தும் பணி, கன்னியாகுமரி தொகுதியில் தோவாளை வட்டாட்சியா் அலுவலகத்திலும், நாகா்கோவில் தொகுதியில் அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியா் அலுவலகத்திலும், குளச்சல் தொகுதியில் கல்குளம் வட்டாட்சியா் அலுவலகத்திலும், பத்மநாபபுரம் தொகுதியில் திருவட்டாறு வட்டாட்சியா் அலுவலகத்திலும், விளவங்கோடு தொகுதியில் மேல்புறம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், கிள்ளியூா் தொகுதியில் கிள்ளியூா் வட்டாட்சியா் அலுவலகத்திலும் ஏப். 16-ஆம் தேதியிலிருந்து நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.

ஆய்வின்போது, நாகா்கோவில் தொகுதி தோ்தல் அலுவலரும் நாகா்கோவில் வருவாய்க் கோட்டாட்சியருமான எஸ். காளீஸ்வரி, கன்னியாகுமரி தொகுதி தோ்தல் அலுவலரும் மாவட்ட வழங்கல் அலுவலருமான புஷ்பா தேவி, துறை அலுவலா்கள், பணியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.