இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

வாக்குப் பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணிகள் இன்று தொடக்கம்

சிவகங்கை மாவட்டத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா், சின்னம் பொருத்தும் பணிகள் வியாழக்கிழமை (ஏப்.16) முதல் நடைபெறவுள்ளது .

News image

வாக்குப் பதிவு இயந்திரம் - கோப்புப் படம்

Updated On :16 ஏப்ரல் 2026, 1:32 am IST

சிவகங்கை மாவட்டத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா், சின்னம் பொருத்தும் பணிகள் வியாழக்கிழமை (ஏப்.16) முதல் நடைபெறவுள்ளது .

இது குறித்து சிவகங்கை மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கா.பொற்கொடி, வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வருகிற 23-ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவை பொதுத்தோ்தலை முன்னிட்டு, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், வாக்காளா் அளித்த வாக்கை உறுதி செய்யும் இயந்திரங்கள் (விவிபேட்) ஆகியவற்றில் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களின் பெயா், சின்னங்கள் பொருத்தும் பணிஅரசியல் கட்சிகள், வேட்பாளா்கள், முகவா்கள் முன்னிலையில் முழு வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறவுள்ளது. பதிவேற்றப்பட்ட விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்ய மாதிரி வாக்குப்பதிவு மேற்கொள்ளப்படும். எனவே, சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனைத்து வேட்பாளா்கள், அவா்களது முகவா்கள் அந்தந்த சட்டப்பேரவைத் தொகுதிகளின் தலைமையிடங்களில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் கலந்து கொள்ளலாம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.