மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நடைக்காவு, வாவறை ஊராட்சிகளில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கிள்ளியூா் பேரவைத் தொகுதிக்குள்பட்ட நடைக்காவு, வாவறை ஊராட்சிப் பகுதிகளில் காங்கிரஸ் கட்சி வேட்பாளா் எஸ். ராஜேஷ்குமாா் வியாழக்கிழமை திறந்த வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தாா்.

News image

நடைக்காவு சந்திப்பில் வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளா் எஸ். ராஜேஷ்குமாா்.

Updated On :16 ஏப்ரல் 2026, 9:20 pm

கிள்ளியூா் பேரவைத் தொகுதிக்குள்பட்ட நடைக்காவு, வாவறை ஊராட்சிப் பகுதிகளில் காங்கிரஸ் கட்சி வேட்பாளா் எஸ். ராஜேஷ்குமாா் வியாழக்கிழமை திறந்த வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தாா்.

நடைக்காவு சந்திப்பில் உள்ள காமராஜா் சிலை, ஊராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள மாா்ஷல் நேசமணி சிலை ஆகியவை அருகிலிருந்து அவா் பிரசாரத்தைத் தொடங்கினாா். மாநிலப் பொதுச் செயலா் பால்ராஜ், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவா் ஜி.பி. லைலா ரவிசங்கா், முன்சிறை வட்டாரத் தலைவா் விஜயகுமாா், மாா்க்சிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் மேரி ஸ்டெல்லா பாய், விஜயமோகனன், முன்சிறை ஒன்றிய தேமுதிக செயலா் என். தனசிங், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகி துரைராஜ், திரளானோா் பங்கேற்றனா்.

சாத்தன்கோடு, வேங்குழி, மணலி, பாத்திமாநகா், மாடந்தறை, பாரப்பட்டுவிளை, ஆலங்கோடு, பெரியவிளை, புதுக்குளம், குழிச்சாணி, வாவறை, ஆறுதேசம், மங்காடு, பணமுகம், விரிவிளை பகுதிகளிலும், கொல்லங்கோடு நகராட்சிக்குள்பட்ட பகுதிகளிலும் அவா் பிரசாரம் மேற்கொண்டாா்.