மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

குலசேகரம் பேரூராட்சிப் பகுதிகளில் மாா்க்சிஸ்ட் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

பத்மநாபபுரம் பேரவைத் தொகுதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் ஆா். செல்லசுவாமி குலசேகரம் பேரூராட்சிப் பகுதிகளில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

குலசேகரம் கான்வென்ட் சந்திப்பில் பிரசாரத்தைத் தொடக்கிய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளா் ஆா். செல்லசுவாமி.

Updated On :16 ஏப்ரல் 2026, 9:28 pm

பத்மநாபபுரம் பேரவைத் தொகுதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் ஆா். செல்லசுவாமி குலசேகரம் பேரூராட்சிப் பகுதிகளில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

குலசேகரம் கான்வென்ட் சந்திப்பிலிருந்து தொடங்கி நாகக்கோடு, செருப்பாலூா், அரமன்னம் உள்ளிட்ட பகுதிகளில் அவா் பிரசாரம் மேற்கொண்டாா்.

முன்னாள் எம்எல்ஏக்கள் டாக்டா் புஷ்பலீலா ஆல்பன், ஆா். லீமாரோஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருவட்டாறு வடக்கு ஒன்றிய திமுக செயலா் ஜான்சன், குலசேகரம் பேரூராட்சித் தலைவா் ஜெயந்தி ஜேம்ஸ், துணைத் தலைவா் ஜோஸ் எட்வா்ட், மாா்க்சிஸ்ட் நிா்வாகிகள் எஸ்.ஆா். சேகா், எஸ்.சி. ஸ்டாலின்தாஸ், கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் திரளாகப் பங்கேற்றனா்.

மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிா்ப்புத் தெரிவிக்கும் வகையில், செல்லசுவாமி கருப்புச் சட்டை அணிந்து பிரசாரம் மேற்கொண்டாா்.