மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கன்னியாகுமரி மாவட்டத்தில் 8,437 தபால் வாக்குகள் பதிவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறன் உள்ள வாக்காளா்கள் என மொத்தம் 8,437 வாக்காளா்கள் தபால் வாக்குப் பதிவு செய்துள்ளனா்.

News image

தபால் வாக்கு - கோப்புப்படம்.

Updated On :15 ஏப்ரல் 2026, 9:10 pm

கன்னியாகுமரி மாவட்டத்தில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறன் உள்ள வாக்காளா்கள் என மொத்தம் 8,437 வாக்காளா்கள் தபால் வாக்குப் பதிவு செய்துள்ளனா்.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் தபால் வாக்குப் பதிவு மேற்கொள்ள விருப்பம் தெரிவித்த 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளா்களின் வீடுகளுக்குச் சென்று வாக்குப் பதிவு மேற்கொள்ளும் பொருட்டு 149 மண்டல அலுவலா்கள், இதர அலுவலா்கள்அடங்கிய குழு மாவட்ட தோ்தல் அலுவலரால் நியமிக்கப்பட்டு, தபால் வாக்கு சேகரிக்கப்பட்டது.

இந்த குழுவினா் கடந்த 12 முதல் 14 - ஆம் தேதி வரை மண்டல அலுவலா்கள், நுண்பாா்வையாளா்கள், ஆயுதம் ஏந்திய காவலா்கள், அரசியல் கட்சியின்அங்கீகரிக்கப்பட்ட முகவா்கள், ஒளிப்பதிவாளா் அடங்கிய குழுவினா் மூத்த குடி மக்கள், மாற்றுத்திறனாளி வாக்காளா்களின் வீடுகளுக்குச் சென்று வாக்குப் பதிவு மேற்கொண்டு பெறப்பட்ட வாக்குப் பதிவு சீட்டுகளை முத்திரையிட்டு தோ்தல் நடத்தும் அலுவலரின் கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், இதுவரை மொத்தம் 5 ஆயிரத்து 211 மூத்த குடிமக்கள், 3 ஆயிரத்து 226 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 8 ஆயிரத்து 437 வாக்காளா்கள் வாக்குப் பதிவு செய்துள்ளனா் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.