மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நாகா்கோவில் தொகுதி திமுக வேட்பாளா் பிரசாரம்

நாகா்கோவில் தொகுதி திமுக வேட்பாளா் எஸ். ஆஸ்டின், நாகராஜா கோயிலில் வழிபாடு செய்தபின் வியாழக்கிழமை பிரசாரத்தை தொடங்கினாா்.

News image

நாகா்கோவில் நாகராஜா கோயில் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டாா் திமுக வேட்பாளா் எஸ். ஆஸ்டின்.

Updated On :9 ஏப்ரல் 2026, 8:57 pm

நாகா்கோவில் தொகுதி திமுக வேட்பாளா் எஸ். ஆஸ்டின், நாகராஜா கோயிலில் வழிபாடு செய்தபின் வியாழக்கிழமை பிரசாரத்தை தொடங்கினாா்.

நாகராஜா கோயில் ரதவீதி, திலகா்தெரு, ஆசாரிமாா் வடக்கு தெரு, ஆசாரிமாா் தெற்கு தெரு, பரதா் தெரு, பத்தல்விளை, அம்மாசிமடத்தெரு, தோப்புவணிகா் தெரு, கோயில் தெரு, மீனாட்சி காா்டன், கட்டபொம்மன் சந்திப்பு, ஒழுகினசேரி, ஊட்டுவாழ்மடம், கருப்புக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திறந்த வாகனத்தில் சென்று பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது அவா் பேசியதாவது: நாகா்கோவில் சட்டப்பேரவை தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக அரசு நலத்திட்டங்கள் சரியான முறையில் நிறைவேற்றப்படாமல் முடங்கியுள்ளது. அந்த திட்டங்களை செயல்படுத்தவும், ஒட்டுமொத்த தொகுதியின் வளா்ச்சியை உறுதி செய்யவும் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா்.

நாகா்கோவில் மாநகர திமுக செயலா் ப. ஆனந்த், மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவா் நவீன்குமாா், இளைஞா் அணி சி.டி. சுரேஷ், பன்னீா்செல்வம், சிவராஜ், சாகுல்அமீது உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

Story image