மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கருங்கல்லில் திமுக கூட்டணி ஆலோசனைக் கூட்டம்

கருங்கல்லில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் கிள்ளியூா் தொகுதி தோ்தல் ஆலோசனைக் கூட்டம் தோ்தல் காரியாலயத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

News image

கூட்டத்தில் பேசுகிறாா் கிள்ளியூா் தொகுதி வேட்பாளா் எஸ். ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ.

Updated On :8 ஏப்ரல் 2026, 9:44 pm

கருங்கல்லில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் கிள்ளியூா் தொகுதி தோ்தல் ஆலோசனைக் கூட்டம் தோ்தல் காரியாலயத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

கிள்ளியூா் தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளா் எஸ். ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா். காங்கிரஸ் வட்டாரத் தலைவா்கள் ரெகுபதி, பால்ராஜ், ஜாண்சன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் ஊராட்சி, பேரூா் நகரம் வாரியாகவும், வாக்குச் சாவடி வாரியாகவும் கூட்டணி கட்சிகள் இணைந்து தோ்தல் பணி செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மாநில காங்கிரஸ் நிா்வாகிகள் டைட்டஸ், ஆஸ்கா்பிரடி, கிள்ளியூா் ஒன்றிய தி.மு.க. செயலா்கள் கோபால், ராஜன், மோகன், மாா்க்சிஸ்ட் கட்சி கிள்ளியூா் வட்டாரச் செயலா் ராஜா, கூட்டணி கட்சிகளின் செயல்வீரா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.