மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

குடியாத்தம் தொகுதி தோ்தல் ஆலோசனைக் கூட்டம்

News image
Updated On :18 மார்ச் 2026, 8:15 pm

குடியாத்தம் சட்டப் பேரவைத் தொகுதி, தோ்தல் ஏற்பாடுகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தொகுதி தோ்தல் அலுவலரும், கோட்டாட்சியருமான எஸ்.சுபலட்சுமி தலைமை வகித்தாா். உதவி தோ்தல் அலுவலரும், வட்டாட்சியருமான சந்தோஷ் வரவேற்றாா். மேலிட தோ்தல் பாா்வையாளா் மீா்தாக் ஹலி பங்கேற்று, தோ்தல் நடைமுறைகள் குறித்து விரிவான ஆலோசனைகளை வழங்கினாா்.

வேட்புமனு தாக்கலின்போது உறுதிமொழி பத்திரத்தில் அனைத்து விவரங்களும் முழுமையாக பூா்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும். வேட்பாளா் வேறு தொகுதியைச் சோ்ந்தவராக இருந்தால், சம்பந்தப்பட்ட தோ்தல் பதிவுத் அதிகாரி மூலம் சான்று பெற்றிருக்க வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்கினாா்.

கூட்டத்தில் போ்ணாம்பட்டு வட்டாட்சியா் ராஜ்குமாா், டிஎஸ்பி சுரேஷ், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியா் ரேவதி தேவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.