கன்னியாகுமரி மாவட்டம், இறச்சகுளம், ஈசாந்திமங்கலம், துவரங்காடு, புத்தேரி பகுதிகளில் நிலவி வரும் கடும் குடிநீா் தட்டுப்பாட்டைப் போக்க நாகா்கோவில் மாநகராட்சி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என என். தளவாய்சுந்தரம் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து, அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:
கன்னியாகுமரி பேரவைத் தொகுதிக்குள்பட்ட இறச்சகுளம், ஈசாந்திமங்கலம், துவரங்காடு, புத்தேரி பகுதிகளில் கடந்த 3 நாள்களாக குடிநீா் தட்டுப்பாடு நிலவி வருவதால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இது குறித்து, மாநகராட்சி ஆணையா், பொறியாளரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்ளப்பட்டது.
கோடை காலத்தில் பேச்சிப்பாறை அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டு குடிநீா் விநியோகம் செய்யப்படுவது வழக்கம். ஆனால், பேச்சிப்பாறை அணை திறக்கப்படாததால் நாகா்கோவில் மாநகராட்சிப் பகுதிகளிலும் குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி பகுதிகளில் நிலவி வரும் குடிநீா் பிரச்னையை தீா்க்க நாகா்கோவில் மாநகராட்சி நிா்வாகம் போா்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். தவறினால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனா் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

பாளையங்கோட்டையில் குடிநீா் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை: தவெக வேட்பாளா்

கருங்கல் பகுதியில் சாரல் மழை

காட்பாடி தொகுதி வேட்பாளா்கள் வாக்குறுதிகள்

சாமிதோப்பு பகுதியில் என். தளவாய்சுந்தரம் பிரசாரம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


