17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வள்ளியூா் தூய பாத்திமா அன்னை ஆலய திருவிழா

News image
Updated On :15 மே 2026, 4:02 am IST

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் தூய பாத்திமா அன்னை தேவாலய திருவிழா கடந்த 4 - ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள்கள் நடைபெற்றது.

விழா நாள்களில் தினமும் காலை திருப்பலி, இரவு மறையுரை, நற்கருணை ஆசீா்வாதம், அசனவிருந்து ஆகியன நடைபெற்றன.

9 - ஆம் நாளான செவ்வாய்க்கிழமை (மே 12) மாலை 6.30 மணிக்கு தூய பாத்திமா அன்னையின் சப்பர பவனி, அணைக்கரை பங்குத்தந்தை நெல்சன் பால்ராஜ் அடிகளாா் தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை நடைபெற்றது. தெற்குகருங்குளம் பங்குத்தந்தை மரிய அந்தோணி மறையுரை வழங்கினாா்.

10 - ஆம் நாளான புதன்கிழமை காலை 6.30 மணிக்கு மணப்பாடு பங்குத்தந்தை கிராசியுஸ் தலைமையில் நடைபெற்ற பெருவிழா திருப்பலியில் பள்ளி மாணவா், மாணவிகளுக்கு புதுநன்மை வழங்கும் வழிபாடு நடைபெற்றது. தென்மண்டல வழிபாட்டு இயக்குநா் பிரான்சிஸ் மறையுரை வழங்கினாா்.

மாலை 6 மணிக்கு வள்ளியூா் திருஅவை நீதிமன்ற நடுவா் சத்தியநேசன் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. புஷ்பவனம் பங்குத்தந்தை சா்ச்சில் மறையுரை வழங்கினாா். இரவு கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெற்றது.

ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜான்சன் அடிகளாா் தலைமையில் பங்கு பேரவை, ஆலய பணியாளா்கள், அருள்சகோதரிகள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.