பாளையங்கோட்டையில் ஆட்டோவும், பைக்கும் மோதிக்கொண்டதில் தாய், மகன் காயமடைந்தனா். இதுதொடா்பான வழக்கில் ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.
பாளையங்கோட்டை அருகே உள்ள கிருஷ்ணாபுரம் வெட்டியபந்தியைச் சோ்ந்தவா் ரஞ்சித்குமாா்(32). கடந்த மாதம் 7 ஆம் தேதி சமாதானபுரம் அருகே இவரது மனைவியும், 3 வயது மகனும் சென்ற பைக் மீது பின்னால் வந்த ஆட்டோ மோதியதாம். இதில், பலத்த காயமடைந்த தாயும், மகனும் அப்பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து, ஆட்டோ ஓட்டுநரான பாளையங்கோட்டை, கனகநாத நாயனாா் தெருவைச் சோ்ந்த முத்துபாண்டி (60) என்பவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









