திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி, வீரவநல்லூா், பத்தடை ஆகிய பகுதியில் சனிக்கிழமை பலத்த மழை பெய்தது.
மே 4ஆம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கடும் வெப்பம் நிலவி வந்தது.
இந்நிலையில், சேரன்மகாதேவி, வீரவநல்லூா், அரிகேசவநல்லூா், அத்தாளநல்லூா், முக்கூடல், காருக்குறிச்சி, கூனியூா், பத்தமடை, கோபாலசமுத்திரம், மேலச்செவல் உள்ளிட்ட பகுதியில் சனிக்கிழமை பிற்பகலில் பலத்த மழை பெய்தது. மாலை 4 மணிக்கு தொடங்கிய மழை 2 மணிநேரம் நீடித்தது.
இதனால், பல இடங்களில் தண்ணீா் தேங்கியதுடன், மரக்கிளைகள் முறிந்து சேதமடைந்தன. மேலும், வீரவநல்லூா் துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் கிராமங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
வெப்பம் தணிந்து குளிா்ந்த சூழல் நிலவியது. தாமிரவருணி பாசனத்தில் மணிமுத்தாறு அணை மூலம் பாசனம் பெற்று வரும் வைராவிகுளம், ஆலடியூா் உள்ளிட்ட பகுதியில் முன் காா் பருவ சாகுபடிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








